பத்தாண்டுகளுக்கு மேல் முதல் நிலை நாயகியாகத் திகழும் நயன்தாரா இதுவரை தமிழ்ப் படங்களில் சொந்தக் குரலில் பேசி நடித்ததில்லை. அந்தக் குறையை நானும் ரவுடிதான் படத்தில் போக்கிவிட்டார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள படம் – ‘நானும் ரெளடிதான்’. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை தனுஷ் தயாரித்துள்ளார். இந்தப் படத்தில்தான் நயன்தாரா சொந்தக் குரலில் பேசியுள்ளார்.

இதுவரை தமிழில் பல படங்கள் நடித்துள்ள நயன்தாரா எந்தவொரு படத்துக்கும் தனது சொந்தக் குரலைப் பயன்படுத்தியதில்லை. ஆனால் முதல்முறையாக நானும் ரெளடி தான் படத்துக்குச் சொந்தக் குரலில் பேசியுள்ளார். அவர் இந்தப் படத்துக்கும் டப்பிங் குரலைப் பயன்படுத்தவே விரும்பினார். ஆனால் இயக்குநர் விக்னேஷ் சிவன் வற்புறுத்திக் கேட்டதால் சொந்தக் குரலில் டப் செய்தாராம்.

சமீபத்தில் வெளியாகியுள்ள நானும் ரவுடிதான் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளது நயன்தாராவின் சொந்தக் குரல்தான்!