ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு நாள் முழுக்க தன் பாட்டி செய்ததை ரசித்து பார்த்த கீர்த்தி சுரேஷ்!

கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் தொடர் வெற்றி படங்களின் மூலம் மளமளவென உச்சம் தொட்டவர். இப்போது அவர் படு பிசி. வரிசையாக பட வாய்ப்புகளை பெறுபவர் தற்போது விக்ரமுடன் சாமி 2 படத்தில் நடித்து வருகிறார்

இவரது பாட்டி சரோஜா தாதா 87 படத்தில் சாருஹாசனுக்கு ஜோடியாக நடித்துள்ளாராம். இப்படத்தை விஜய் ஸ்ரீ இயக்க முழுக்க முழுக்க ஹீரோவாக நடித்துள்ளார் சாரு ஹாசன்.

இப்படத்தில் யாரை ஜோடியாக வைக்கலாம் என இயக்குனர் கேட்டபோது சாரு தன் தோழி சரோஜாவை பற்றி சொல்லியிருக்கிறார். இருவரும் குடும்ப நண்பர்களாம்.

அவரே சரோஜாவிடம் பேசி நடிக்க சம்மதிக்க வைத்துள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சரோஜா தன் பேத்தி கீர்த்தியையும் அழைத்து வந்துள்ளார்.

ஒரு நாள் முழுக்க கீர்த்தியும் அங்கேயே இருந்து தன் பாட்டி மற்றும் சாரு ஹாசனின் லவ் சீன்களை பார்த்து ரசித்து மகிழ்ந்தாராம்.

Loading...