கவுரவ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன், சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படை வெல்லும் திரைக்கு வந்துள்ளது. இந்த படத்தினை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படை வெல்லும் படத்தின் ப்ரோமோஷனுக்கு நடிகை மஞ்சிமா மோகன் பங்கேற்கவில்லை. அதற்காக மஞ்சிமா மன்னிப்பு கேட்டுள்ளார்.

“பத்திரிகையாளர் சந்திப்புக்கு வர முடியாததால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் ‘குயின்’ படத்தின் ரீமேக் படப்பிடிப்புக்காக பிரான்சில் அடுத்த 30 நாட்கள் இருக்கிறேன்,” என அவர் கூறியுள்ளார்.

மேலும் சினிமா பார்க்கும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். படத்தை திரையரங்குகளில் மட்டும் பாருங்கள். கள்ளத்தனமாக பார்க்காதீர்கள் என மஞ்சிமா வேண்டுகோள்விடுத்துள்ளார்.

Loading...