சீரியலில் வெற்றிபெற்ற பல நாயகிகள் இப்போது சினிமாவை நோக்கி பயணம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு சீரியல் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் கவனத்திற்கு வந்தவர் பிரியா.

இவரது நடிப்பில் அண்மையில் மேயாத மான் என்ற திரைப்படம் திரைக்கு வந்து ரசிகர்கள் மட்டுமில்லாது பிரபலங்களிடமும் பாராட்டை பெற்றது.

இந்த நிலையில் இவர் அடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி அவர்களுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறாராம். நேற்று இப்பட பூஜையின் போது பிரியா வரவில்லை, இதனால் இவர் படத்தில் இருந்து வெளியேறிவிட்டாரா என ரசிகர்கள் புலம்ப ஆரம்பித்துவிட்டனர்.

ரசிகர்களின் குழப்பத்தை போக்க பிரியா தன்னுடைய டுவிட்டரில் கார்த்தி, பாண்டிராஜ் படத்தில் தான் நடிப்பதாகவும், சில காரணங்களால் பூஜைக்கு வர முடியவில்லை என்று கூறியுள்ளார்.

Loading...