சினிமாவில் யாருமே என்னை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. வாய்ப்பு தரவில்லை என்று புலம்பியிருக்கிறார் நடிகை நீத்து சந்திரா.

நீத்து சந்திரா, தான் அடுத்த படத்தில் நடிக்கும் கேரக்டருக்காக இரண்டே மாதங்களில் 11 கிலோ எடை குறைத்திருக்கிறார். மேலும் அந்தப் படத்துக்காக ஆக்‌ஷன் காட்சிகளில் கலக்க மார்ஷியல் ஆர்ட் கலையையும் கற்று வருகிறார்.

இந்நிலையில் நீத்து சந்திரா தன்னை சினிமாவில் யாரும் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. நல்ல ரோல்களாக தரவில்லை என்றும் வருத்தப்பட்டு புலம்பியிருக்கிறார்.

நீத்து சந்திரா
நீத்து சந்திரா

நீத்து சந்திரா தமிழில் ஒரு இயக்குநருடன் சேர்ந்து கிசுகிசுக்கப்பட்டார். அந்த இயக்குநரின் பிடியில் இருப்பதாக சொல்லப்பட்டதாலேயே அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் குவியவில்லை என்ற பேச்சு இருக்கிறது.