வரலட்சுமி சரத்குமார் இன்ஸ்டாகிராமில் சேர்ந்துள்ளார்.

நாட்டாமை சரத்குமார் மகள் என்று அலட்டிக் கொள்வது இல்லை, சீன் போடுவதும் கிடையாது, ஓவராக கன்டிஷன் போட்டு இயக்குனரை கடுப்பேற்றுவதும் கிடையாது. அதனால் தான் வரலட்சுமி சரத்குமார் கையில் பல படங்கள் உள்ளன.

சத்தமில்லாமல் அதிக படங்களில் ஒப்பந்தமாகிக் கொண்டிருக்கிறார் வரலட்சுமி. தனுஷின் மாரி 2 படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கும் வரலட்சுமியை இன்ஸ்டாகிராமுக்கு வருமாறு நட்பு வட்டாரத்தில் இருந்து அன்புக் கோரிக்கை வந்துள்ளது.

இதையடுத்து வரலட்சுமி இன்று இன்ஸ்டாகிராமில் சேர்ந்துள்ளார். கடலோரம் இருக்கும் இடத்தில் நின்று எடுத்த புகைப்படத்தை முதன்முதலாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

வாம்மா மின்னலு என்று ரசிகர்கள் அவரை வரவேற்று கமெண்ட் போட்டுள்ளனர். இன்ஸ்டாகிராமில் சேர்ந்ததை ட்விட்டரிலும் தெரிவித்துள்ளார் வரலட்சுமி.