மேகா ஆகாஷ் தனுஷிற்கு ஜோடியாக எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்து வருபவர். இவர் நடிப்பில் ஒரு பக்க கதை படம் கூட ரிலிஸிற்கு வெயிட்டிங்.

இன்னும் ஒரு படம் கூட தமிழில் இவருக்கு ரிலிஸ் ஆகவில்லை என்றாலும், இவருக்கு என்று பெரிய ரசிகர்கள் வட்டம் உருவாகி விட்டது.

இந்நிலையில் சமீபத்தில் இவரிடம் ஒரு பேட்டியில் தனுஷிடம் உங்களுக்கு பிடிக்காதது எது? என்று கேட்டுள்ளனர்.

எனை நோக்கி பாயும் தோட்டா
எனை நோக்கி பாயும் தோட்டா

அதற்கு அவர் ‘தனுஷிடம் பிடிக்காதது என்று ஏதுமில்லை, மிகச்சிறந்த நடிகர் அவர், ஆனால், படப்பிடிப்பில் என்னை விட மிகவும் அமைதியாக இருப்பார், பேசவே மாட்டார், அது மட்டும் தான் குறை’ என்று மேகா கூறியுள்ளார்.