தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ள படத்தில் அனுஷ்கா ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடுகிறாராம்.

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனும் நடிகை அனுஷ்காவும் நண்பர்கள் ஆவர். அனுஷ்கா நடிப்பில் வெளியாகியுள்ள பிரமாண்ட படமான ருத்ரமா தேவியில் அல்லு அர்ஜுன் சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ருத்ரமா தேவி பாக்ஸ் ஆபீஸில் கலக்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடுகிறாராம் அனுஷ்கா. நண்பன் அல்லு அர்ஜுனுக்காக குத்தாட்டம் போட சம்மதித்துள்ளாராம்.

படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடிக்க உள்ளாராம். பாகுபலி, ருத்ரமா தேவி என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்துள்ள அனுஷ்காவை குத்தாட்டம் போட வைப்பதன் மூலம் அல்லு அர்ஜுன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.

எது என்னவோ அனுஷ்காவின் குத்தாட்டத்தை பார்க்க தெலுங்கு ரசிகர்கள் தற்போதே தயாராகிவிட்டனர்.