நடிகை அமலா பால் காதலர் தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார். நடிகை அமலா பால் இயக்குனர் ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்தார். ஆனால் அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். விவாகரத்திற்கு பிறகு படங்களில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார் அமலா.

அமலா பால் கை நிறைய படங்கள் வைத்துக் கொண்டு பிசியாக நடித்து வருகிறார். படங்கள் தவிர்த்து விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார் அமலா பால்.

அமலா பால் காதலர் தினத்தை தனது செல்லக்குட்டியுடன் மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார். காதலர் தின கொண்டாட்ட புகைப்படங்களை அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

அமலா பால் நேரம் கிடைக்கும்போது எல்லாம் எங்காவது பயணம் செல்கிறார். பயணம் செய்வதன் மூலம் வாழ்க்கையில் நிறைய கற்றுக் கொள்ள முடிகிறது என்கிறார்.

தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் அழகேசன் மீது போலீசில் புகார் அளித்தார் அமலா பால். அவரின் துணிச்சலை திரையுலக பிரபலங்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.

Loading...