தமிழ் சினிமாவில் வெள்ளாவி என்று அழைக்கப்படும் டாப்ஸி. தமிழ் படமாக இருந்தாலும் இந்தி படமாக இருந்தாலும் அவரது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் மற்றும் நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

ஆடுகளம் படத்தில் ஆங்கிலோ இந்தியன் பெண்ணாகவும், காஞ்சனாவில் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், சமீபத்தில் கைவிடப்பட்ட சிம்புவின் கான் படத்தில் போலீஸ் அதிகாரியாகவும் இவரது கதாபாத்திரங்களில் பல வித்தியாசங்களை காட்டிக் கொண்டிருக்கிறார்.
தற்போது மீண்டும் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்துக்கு தயாராகிவிட்டார் டாப்ஸி. இதுவரை தயாரிப்பாளராக இருந்த சி.வி.குமார் தற்போது இயக்குநராக அவதாரம் எடுத்திருப்பதால் அவரின் பெயரிடப்படாத புதிய படத்தில் மனநல மருத்துவராக நடிக்கிறாராம் டாப்ஸி.
சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்கிறார், இவர் தமிழில் யாருடா மகேஷ் என்ற படத்தில் நாயகனாக நடித்தவர். ஸ்டுடியோ க்ரீன் மற்றும் திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.