நடிகை தமன்னாவிற்கு இந்த வருடம் வெற்றிகரமான வருடமாக மாறிவிட்டது. பாகுபலி படம் பிரமாண்ட வெற்றி பெற்றதால் இந்த வருடம் எனக்கு ‘பாகுபலி தீபாவளி’ என கூறியுள்ள அவர், தனது குடும்பத்துடன் விழாவை கொண்டாடி வருகிறார். மேலும் அவருடைய நீண்ட நாள் கனவு பற்றியும் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷனோடு நடிக்க வேண்டும் என்பதுவே அது.

தற்போது பாகுபலி-2, தோழா போன்ற படங்களில் நடித்து வரும் அவர் விரைவில் ஹிந்தி சினிமாவில் நுழைவார் என எதிர்பார்க்கலாம்.

சமீபத்தில் ஷாருக்கானோடு அவர் நடித்த ஒரு விளம்பர படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.