தனது ஒவ்வொரு படைப்புகளுக்கும் ஒரு தனி உருவத்தை கொடுத்துக் கொண்டிருக்கும் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படம் “வட சென்னை”. விசாரணை என்ற படத்தை இயக்கி அதை அனைத்து திரைப்பட விழாவுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார் வெற்றிமாறன்.

இன்னொரு பக்கம் பிரபுசாலமன் படம், துரை செந்தில்குமார் படம் என அடுத்தடுத்து கமிட்மெண்டுகளுடன் பிசியாக சுற்றிக் கொண்டிருக்கிறார் தனுஷ். அப்போ வட சென்னை படத்தை எப்போ தூசி தட்டுவீங்க என்றால் அதற்கான பதில் நம்மிடையே இல்லை என்பதுதான் உண்மை. மேலும் வட சென்னை படத்துக்காக தனுஷ் 200 நாட்கள் கால்ஷீட்டை தர ஒத்துக் கொண்டுள்ளாராம். இரண்டு பாகங்களாக இப்படம் உருவாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 30 வருடங்களில் வட சென்னையில் நிலவி வரும் கருப்பு உலகத்தை வெளிச்சம்போட்டு இந்த படம் காட்டவிருக்கிறது.
வட சென்னை படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் சமந்தாவுக்கு மேக்கப் கிடையாது, சொந்த குரலில்தான் பேசனும் என்று பல கண்டிஷன்கள் போட்டுள்ளாராம் இயக்குநர் வெற்றிமாறன், சொன்ன கண்டிஷன்களுக்கு ஓகே சொல்லிவிட்டு வட சென்னை படத்துக்கு எப்போ கால்ஷீட் கேட்டாலும் ரெடி என்று கூறிவிட்டாராம்.