பிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி.

தெலுங்கு திரையுலகை அடுத்து தமிழ் திரையுலகிலும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தவர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளார் ஸ்ரீ ரெட்டி. தற்போது சென்னை வந்துள்ள அவர் தனது புகார்கள் குறித்து தொடர்ந்து பேட்டி அளித்து வருகிறார்.

பிரபலங்கள் அழைத்தால் நீங்கள் ஏன் படுக்கைக்கு சென்றீர்கள் என்று பலரும் அவரிடம் ஃபேஸ்புக்கில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ராகவா லாரன்ஸ் இப்படி செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை. அவரை பற்றி நல்லவிதமாக கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் பட வாய்ப்பு வேண்டுமானால் என்னை படுக்கையில் திருப்திபடுத்த வேண்டும் என்று கூறினார். நானும் அவர் சொன்னபடியே செய்தும் பட வாய்ப்பு அளிக்காமல் ஏமாற்றிவிட்டார். ஏழை மக்களுக்கு உதவி செய்து, போராட்டங்களில் கலந்து கொண்டு அவர் உங்களுக்கு நல்லவர் போன்று தெரியலாம். ஆனால் அவர் என்னிடம் தவறாக நடந்து கொண்டது உண்மை தான். நான் பொய் சொல்லவில்லை என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி.

இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக நான் கூறியது உண்மையே. உங்களுக்கு முன்பு வேண்டுமானால் அவர் நல்லவராக இருக்கலாம். ஆனால் நான்கு சுவர்களுக்குள் அவர் எப்படிப்பட்டவர் என்பது அனைவருக்கும் தெரிய வாய்ப்பு இல்லை என்கிறார் ஸ்ரீரெட்டி. எந்த கிசுகிசுவிலும் சிக்காத முருகதாஸ் மீது ஸ்ரீ ரெட்டி இப்படி ஒரு புகார் தெரிவித்துள்ளது திரையுலகினர் தவிர்த்து ரசிகர்களையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஒரு பேட்டியில் தன்னிடம் ஆதாரம் இல்லை என்றார் ஸ்ரீ ரெட்டி. படுக்கைக்கு செல்லும்போது கேமராவுடனா செல்வார்கள் என்று கேள்வி எழுப்பினார். மற்றொரு பேட்டியில் தன்னிடம் வீடியோ ஆதாரங்கள் உள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினால் அனைத்து ஆதாரங்களையும் அளித்து ஒத்துழைப்பேன் என்கிறார். அவர் மாற்றி மாற்றி பேசுவது மக்களை குழப்பம் அடைய வைத்துள்ளது. அவர் ஆதாரமில்லாமல் சும்மா புகார் கூறுகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அவர் ஏமாற்றினார், இவர் ஏமாற்றினார் என்று கூறுகிறீர்களே, நீங்கள் ஏன் அவர்களுடன் படுக்கைக்கு சென்றீர்கள் என்று நெட்டிசன்ஸ் கேட்கிறார்களே என்று பேட்டி ஒன்றில் ஸ்ரீ ரெட்டியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவரோ, தான் வீட்டை விட்டு வெளியேறி தனியாக வசிப்பதால் உணவு, வாடகை, பிற செலவுகளுக்கு பணம் தேவைப்பட்டதால் படுக்கைக்கு சென்றதாக கூறினார். இப்படி செய்வதற்கு வேறு வேலை பார்க்கலாமே என்று கேட்டதற்கு, நான் கிளாமர் துறையை சேர்ந்தவள். நான் என்ன செய்ய வேண்டும், செய்யக் கூடாது என்று கூறும் உரிமை யாருக்கும் கிடையாது. எனக்கு இந்த துறை தான் பிடித்துள்ளது என்கிறார் ஸ்ரீ ரெட்டி.