நயன்தாராவின் பிறந்தநாளான நேற்று அவருக்கு வாழ்த்துக்கள் வந்து குவிந்தது. ஆனால், இவர் சத்தமில்லாமல் வாடிகனுக்கு கிளம்பிவிட்டார்.

ஆம், நயன்தாரா தன் பிறந்தநாளை ரோமில் உள்ள வாடிகனில் தான் கொண்டாடியுள்ளார். அங்குள்ள அனைத்து புனித ஸ்தலங்களுக்கும் சென்றுள்ளார்.

பிறப்பால் கிறிஸ்துவரான இவர், பிரபுதேவா மீது கொண்ட காதலால் இந்து மதத்திற்கு மாறினார். பின் அந்த காதல் தோல்வியில் முடிந்தது.

நேற்று கிறிஸ்துவ மதத்தலைவர் போப் அவர்களிடம் ஆசி வாங்கியுள்ளார். விரைவில் இவர் மீண்டும் கிறிஸ்துவ மதத்திற்கு மாறுவார் என கூறப்படுகின்றது.