தான் ஒரு பேராசை பிடித்தவள் என்று நடிகை அனுபமா பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொடி படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன் கன்னட படம் ஒன்றில் நடிக்கிறார். அவர் தெலுங்கு திரையுலகில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் அவர் பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,

மலையாளி என்பதால் தமிழ் எனக்கு நன்றாக தெரியும். தெலுங்கு கற்க கஷ்டப்பட்டேன். நான் நடிக்க வந்ததில் இருந்தே கன்னட பட வாய்ப்புகள் வருகிறது. ஆனால் நான் தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக இருந்தேன். புனித் ராஜ்குமார் படத்தின் கதையை கேட்டதும் பிடித்துவிட்டது. அதனால் அந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். புனித் ராஜ்குமார் உள்பட அனைவரும் என்னை நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள்.

பிரகாஷ் ராஜ் சாருடன் 6 மாதம் ஷூட்டிங் நடந்தது. ஒரு சின்ன சம்பவத்தை பெரிதாக்கிவிட்டார்கள். பிரகாஷ் ராஜ் சார் ஒரு சின்ன அறிவுரை கூற அதை பெரிதாக்கிவிட்டார்கள். எனக்கும், அவருக்கும் ஆகவே ஆகாது என்பது போன்று பேசிவிட்டார்கள். அந்த சம்பவம் நடந்த பிறகு கூட நாங்கள் 25 நாட்கள் படப்பிடிப்பில் சேர்ந்து கலந்து கொண்டோம்.

படத்தின் எத்தனை ஹீரோயின்கள் இருக்கிறார்கள் என்பதை பார்ப்பது இல்லை. என் கதாபாத்திரம் என்ன என்பதை மட்டுமே பார்க்கிறேன். என் பட இயக்குனர்கள் எனக்கு வலுவான கதாபாத்திரங்களை கொடுக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ரொம்ப ஸ்வீட். வித்தியாசமான கதாபாத்திரங்களை கைப்பற்ற பேராசையுடன் உள்ளேன்.

படங்கள் தோல்வி அடைவது அனைவருக்கும் நடப்பது தான். அனைத்து படமும் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்க முடியாது. தோல்வி அடைந்த படங்களில் இருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். அதன் பிறகு கதையை தேர்வு செய்வதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றேன். நான் தற்போது பெரும்பாலும் ஹைதராபாத்தில் தான் உள்ளேன் என்கிறார் அனுபமா பரமேஸ்வரன்.