தமிழ் பட உலகில் முன்னணி நடிகையாக இருந்த நமீதா நீண்ட நாட்களாக தமிழ் பட வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்தார். சமீபத்தில் உடல் எடையை குறைத்த நமீதா மலையாள படம் ஒன்றில் மம்முட்டியுடன் நடித்து வருகிறார்.

தமிழ் படங்களில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இப்போது, பிரபு முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘மீன் குழம்பும் மண் பானையும்’ படத்தில் நமீதாவுக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இதில் வெளிநாட்டு பெண்ணாக வரும் நமீதா பின்னர் தமிழ்நாட்டுக்கு வந்து தமிழ் பாரம்பரியத்தின் பெருமைகளை உணர்ந்து தமிழ் கலாசாரத்தை நேசிப்பது போன்ற வேடத்தில் நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் படத்தில் நடிப்பதால் நமீதா மகிழ்ச்சியில் உள்ளார்.