தமிழ்நாடு வெள்ள நிவாரண நிதிக்கு நடிகை ஹன்சிகா ரூ 15 லட்சம் நிதியுதவி அளித்து இருக்கிறார். தமிழ்நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக பெய்துவரும் மழை தமிழக மக்களுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிக, நடிகையர் தங்களால் முடிந்த நிதியுதவியை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை ஹன்சிகாவும் ரூ 15 லட்சங்களை நன்கொடையாக அளித்திருக்கிறார்.இந்த நிதி காசோலையாக நடிகர் சங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், நடிகர் சங்கம் மூலமாக முதலமைச்சரின் வெள்ள நிவாரண நிதிக்கு அது சென்றடையும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே நடிகர்கள் சூர்யா, கார்த்தி, சத்யராஜ், பிரபு, விக்ரம் பிரபு,சிபிராஜ்,சிவகார்த்திகேயன்,ரஜினி,விஷால் மற்றும் நாசர் ஆகியோர் நிதியுதவி அளித்திருக்கின்றனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு தமிழ்த் திரையுலகம் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாளத் திரையுலகினரும் நிதியுதவி அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.