விஜய் சேதுபதி-நயன்தாரா நடிப்பில் வெளிவந்த நானும் ரவுடி தான்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து விஜய் சேதுபதி அடுத்து சீனுராமசாமி இயக்கத்தில் தர்மதுரை படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்க மேலும் 3 கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர். மேலும், இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடந்ததாம்.

ஆனால், அவர் ஒரு பாடலுக்கு என்னால் நடனமாட முடியாது என்று கூறி மறுத்து விட்டாராம்.