ரஜினியுடன் ஒரு படத்திலாவது நடித்தால்தான் எனது சினிமா வாழ்க்கையின் பயணம் பூர்த்தி அடையும் என்று பகிரங்கமாகவே ரஜினியுடன் நடிக்க கால்ஷீட்டுடன் காத்திருப்பதை வெளிப்படையாக சமீபத்தில் தெரிவித்தார் திரிஷா.

அவரது ஆசை இன்னும் கனவாகவே இருக்கிறது. யாரும் எதிர்பார்க்காத வகையில் சமீபகாலமாக தமிழ் படங்களில் டாப் ஹீரோக்களுடன் ேஜாடி சேர்ந்து வருகிறார் எமி ஜாக்ஸன். ஐ படத்தில் விக்ரமுடன் ஜோடி சேர்ந்தவர் தனுஷுடன் ‘தங்க மகன்’ படத்தில் இணைந்தார்.

அதைத் தொடர்ந்து ரஜினியுடன் ஷங்கர் இயக்கும் 2.0 படத்தில் நடித்து வருகிறார். விஜய்யுடன் ‘தெறி’யில் நடிக்கிறார்.அடுத்து எமியின் குறி அஜீத்துடன் நடிப்பதுதான் என்பதை வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.

அதுவும் இந்த ஆண்டிலேயே தனது எண்ணம் பலிக்கும் என்று அவர் நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறாராம். ஆனாலும் தனக்கு விருப்பமான நடிகர் என்றால் அவர் தனுஷ்தான் என்கிறார்.

Loading...