தேசிய விருது பெற்ற ‘தங்க மீன்கள்’ படத்தை தொடர்ந்து தரமணி படத்தை இயக்கி வந்தார் இயக்குனர் ராம். இதில் வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அழகம் பெருமாள் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தற்போது இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தொடங்கப்பட்டு விட்டது. இதனிடையில் சவரக்கத்தி படத்தில் மிஷ்கினுடன் நடித்து வந்தார். இவற்றைத் தொடர்ந்து ஒரு புதிய படத்தை இயக்கவிருக்கிறார் ராம். இப்படத்திற்கு பேரன்பு என்று பெயரிட்டுள்ளனர்.

இதில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி, அஞ்சலி நடிக்கின்றனர். இவர்கள் இருவரும் இணைவது இதுவே முதன்முறையாகும். முக்கிய கதாபாத்திரத்தில் ‘தங்க மீன்கள்’ சாதனா நடிக்கிறார்.

இப்படத்தை பி.எல்.தேனப்பன் தயாரிக்க இருக்கிறார். இசை யுவன் ஷங்கர் ராஜா. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்கிறார். நாளை ஜனவரி 6ஆம் தேதி முதல் கொடைக்கானலில் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது.