பூ, மரியான் படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் பார்வதி. இவர் தற்போது பெங்களூர் நாட்கள் படத்தில் நடித்துள்ளார்.

இதன் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடந்தது. இதில் இவர் ‘என் பெயர் பார்வதி மட்டுமே, என் பாஸ்போர்ட்டில் கூட அப்படி தான் உள்ளது.

என்னை இனி பார்வதி மேனன் என அழைக்காதீர்கள்’ என்று கூறியுள்ளார். மேலும், என் பெயரில் ஜாதி சேர்த்து எழுதுவதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று புரட்சிகரமாகவும் பேசினார்.

Loading...