விஷாலுக்கும் இதுக்கும் சம்பந்தமே கிடையாது – வரலட்சுமி சரத்குமார்

வரலட்சுமி சரத்குமார்
வரலட்சுமி சரத்குமார்

பாலா இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் உருவாகி இருக்கும் 1000வது படம் தாரை தப்பட்டை. வரும் 14ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தை ஐங்கரன் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.

படத்தின் புரொமோஷனுக்காக படக்குழுவினர் பத்திரிக்கையார்களை சந்தித்தனர்.

அப்போது வரலட்சுமியிடம், இந்த வாய்ப்பு கிடைக்க விஷால் காரணமா என்று கேட்டதற்கு அவர், “யார் இந்த மாதிரி எல்லாம் சொல்றது? இந்த வாய்ப்பு கிடைத்ததற்கு சங்கீதா மேடம் தான் காரணம். இப்படம் நடனம் சம்பந்தப்பட்டது. ஏற்கெனவே வரலட்சுமி நடனம் பயின்று இருப்பதால் பேசலாம்னு இருக்கேன் என்று பாலா சார் சொல்லியிருக்கிறார். இதை சங்கீதா மேடம் என்னிடம் சொன்னார்கள்.

பாலா சாரை நான் போய் சந்தித்தபின், நடன பயிற்சி மேற்கொண்டேன், பிறகு கிடைத்த வாய்ப்பு தான் இந்த தாரை தப்பட்டை என்றார்.

Loading...