நடிகை அனுஷ்கா தற்போது பாகுபலி இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் காதலை பற்றியும் தனது திருமணம் எப்போது என்பதை பற்றியும் பதில் கூறியுள்ளார்.

காதல் என்பது வெறும் கவர்ச்சி தான், அந்த மாய வலையில் பலர் இளம் வயதில் மாட்டி கொள்கிறார்கள். எனக்கு காதல் அனுபவம் இல்லை, காதலிக்க நேரமும் இல்லை, பல பேர் இளம் வயதில் காதல் வலையில் சிக்கி பிறகு காலப்போக்கில் அதை யோசித்து பார்த்து சிரிப்பார்கள்.

தற்போதைக்கு சினிமாவில் ஓய்வில்லாமல் நடித்து வருகிறேன், சினிமா மட்டுமே என் காதல். என் திருமணம் தகுந்த நேரத்தில் நடக்கும், எனக்கு வரப்போகும் கணவருக்கு சில தகுதிகள் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அவரிடம் ஒளிவு மறைவுகள் இருக்க கூடாது, வெளிப்படையாக பழக வேண்டும். எனக்கு பிடிக்கும் விஷயங்கள், அவருக்கும் பிடிக்க வேண்டும்.

அப்படிப்பட்டவரை சந்திக்கும் தருணத்துக்காக காத்திருக்கிறேன் என்று அனுஷ்கா கூறியுள்ளார்.