ரசிகர்களுக்கு விரைவில் சன்னி லியோனின் டபுள் ட்ரீட்.. !

ஒரு சன்னி லியோன் வந்தாலே ரசிகர்கள் வெறித்தனமாக சாமியாடுகிறார்கள். இதில் இரண்டு சன்னி லியோன் வந்தால் எப்படி இருக்கப் போகிறதோ. மஸ்திஸாதே என்ற படத்தில் சன்னி லியோன் இரட்டை வேடத்தில் நடிக்கிறாராம்.

லைலா மற்றும் லிலி லேலே என்ற இரண்டு கேரக்டர்களில் அவர் மஸ்திஸாதே படத்தில் நடிக்கவுள்ளர்.

இப்படத்தில் வீர் தாஸ் சன்னி லியோனுக்கு ஜோடியாக, ஹீரோவாக நடிக்கிறார்.

இந்தப் படம் கவர்ச்சி கலந்த காமெடிப் படமாக உருவாகிறதாம். இதனால்தான் கவர்ச்சியிலும், காமெடியிலும் ஜொலிக்கும் வகையில் சன்னி லியோனுக்கு இரண்டு கேரக்டர்களை உருவாக்கி விட்டனராம்.

இப்படத்தில் துஷார் கபூரும் இன்னொரு ஹீரோவாக நடிக்கக் கூடும் என்று தெரிகிறது. ஏற்கனவே சன்னி லியோனுடன் துஷார் கபூர் ஜோடியாக நடித்துள்ளார் என்பது தெரிந்ததே.

இந்தப் படத்தை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பதாக ஹீரோ வீர் தாஸ் கூறியுள்ளார். அவர் சன்னி லியோன் படத்தில் நடிப்பது இதுவே முதல் முறையாகும்.

அதேபோல சன்னி லியோனும் கூட இப்படத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். இது காமெடியும் கவர்ச்சியும் கலந்த கதை என்பதால் திரில்லிங்காக இருக்கிறது என்கிறார் சன்னி லியோன்.

படத்தை இயக்கவிருப்பது மிலப் ஜவேரி. இந்தப் படத்தில் வீர் தாஸும், துஷார் கபூரும் முற்றிலும் வித்தியாசமாக காட்சி தருவார்கள் என்று இவர் உறுதி அளிக்கிறார்.

இந்தப் படம் தவிர அகமது கான் இயக்கும் லீலா, தேவங் தோலகியாவின் டினா, லோலோ ஆகிய படங்களிலும் சன்னி லியோன் நடிக்கிறார்.

Loading...