அப்பா அர்ஜுன் இயக்கத்தில் நடிக்க பயமாக உள்ளது என்று ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.

அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா விஷால் நடித்த பட்டத்து யானை படம் மூலம் நடிகை ஆனார். நண்பன் விஷாலுக்காக நடிக்க வந்த ஐஸ்வர்யாவின் முத்ல் படம் எதிர்பார்த்தபடி ஓடவில்லை. மேலும் ஐஸ்வர்யாவின் நடிப்பையும் பலர் விமர்சித்தனர்.

இதையடுத்து ஐஸ்வர்யாவுக்கு பட வாய்ப்புகள் ஒன்றும் வரவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மகளை ஹீரோயினாக வைத்து ஒரு காதல் கதை படத்தை இயக்க உள்ளார் அர்ஜுன்.
அர்ஜுன் தான் நடித்து வரும் ஜெய்ஹிந்த் 2 படத்தை முடித்த பிறகு மகளை வைத்து படம் எடுக்க உள்ளார்.

இந்நிலையில் இது குறித்து ஐஸ்வர்யா கூறுகையில்,

படத்தின் திரைக்கதை இறுதி செய்யப்பட்டுவிட்டது. தலைப்பு இனி தான் வைக்க வேண்டும். அப்பா படத்தில் நடிப்பதை நினைத்து மகிழ்ச்சியாக இருந்தாலும் பயமாகவும் உள்ளது. படப்பிடிப்பின்போது கோபப்படாமல் அமைதியாக இருக்கும் இயக்குனர் அவர். அவர் எதிர்பார்க்கும்படி காட்சி அமையும் வரை நம்மை விட மாட்டார் என்றார்.