சமீபத்தில் ஆந்திராவில் தெலுங்கு நடிகை திவ்யாஸ்ரீ விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டது நினைவிருக்கலாம். இந்த செய்தியை எழுதிய சில இணையதளங்கள், திவ்யஸ்ரீயை ஊதா கலரு ரிப்பன் புகழ் நடிகை ஸ்ரீதிவ்யா என மாற்றி எழுதி, படமும் வெளியிட்டுவிட, பதறிப் போனார் ஸ்ரீதிவ்யா.

உடனடியாக தன் தரப்பிலிருந்து ஒரு விளக்கத்தையும் அனுப்பியுள்ளார். திவ்யஸ்ரீ என்ற பெயரில் கைதான நடிகையின் பெயரை என் பெயரோடு சேர்த்து குழப்பி வருகிறார்கள் சிலர். சில இணையதளங்களில் என் படத்தையே வெளியிட்டுள்ளனர்.

தயவு செய்து தெளிவாக விசாரித்து எழுதவும்.

நான் ஸ்ரீதிவ்யா. திவ்யஸ்ரீ அல்ல என அதில் விளக்கம் அளித்துள்ளார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற ஒரே படத்தில் ஓஹோ என உச்சத்துக்குப் போய்விட்டவர் ஸ்ரீதிவ்யா. இப்போது அவர் ஆறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.

Loading...