நயன்தாரா காட்டில் சோ என்று வாய்ப்பு மழை பொழியக் காரணம் ஹீரோக்கள் தான் என்பது தெரிய வந்துள்ளது. நயன்தாராவின் செகண்ட் இன்னிங்ஸ் மிகவும் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது என்று தான் கூற வேண்டும். பிரபுதேவாவை திருமணம் செய்து கொண்டு செட்டிலாக சினிமாவை விட்டு விலகியவர் அந்த காதல் முறிந்ததால் மீண்டும் நடிக்க வந்தார். காதல் முறிவுக்கு பிறகு நயனுக்கு வாய்ப்புகள் வருமா என்று பலர் நினைத்தபோது அவர்களை வியப்பில் ஆழ்த்திவிட்டார்.

முதல் இன்னிங்ஸில் ஜோடி சேர்ந்த அஜீத்துடன் இரண்டாம் இன்னிங்ஸில் ஆரம்பம் படம் மூலம் மீண்டும் ஜோடி சேர்ந்தார் நயன்.

அஜீத்தை தவிர்த்து தொடர்ந்து இளம் ஹீரோக்களின் ஜோடியாக நடித்து வருகிறார் நயன்தாரா. அது எப்படி இந்த நயனுக்கு மட்டும் வாய்ப்புகள் வருகிறது என்று நினைக்கலாம்.

நயன்தாராவை தங்களின் ஜோடியாக்குமாறு இளம் ஹீரோக்கள் தான் வாய் விட்டு கேட்கிறார்களாம். அதனாலேயே தயாரிப்பாளர்களும் நயன் வீட்டு வாசலில் நிற்கிறார்கள்.

இப்படி ஹீரோக்கள் நயன்தாரா தான் ஜோடியாக வேண்டும் என்று அடம்பிடிக்கும் அளவுக்கு அவரிடம் என்ன உள்ளது என்று நீங்கள் ரூம் போட்டு யோசிக்க செல்ல வேண்டாம். அந்த கெமிஸ்ட்ரி கெமிஸ்ட்ரின்னு சொல்கிறார்களே அது நயன்தாராவுடன் சூப்பராக இருக்கும் என்று ஹீரோக்கள் நினைப்பது தான் அவருடன் நடிக்க வேண்டும் என்று அவர்கள் ஆசைப்படுகிறார்கள்.

ராஜா ராணி இயக்குனர் அட்லீயின் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா தான் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

நயன்தாராவுக்கு மட்டும் எப்படி இந்த கெமிஸ்ட்ரி கை கொடுக்கிறது என்று பிற நடிகைகள் வியக்கிறார்கள். தெலுங்கு படங்களில் நடிக்க நயனுக்கு தடை விதிக்கப்பட்டால் என்ன. தமிழிலில் தான் அவருக்கு நாளுக்கு நாள் மவுசு அதிகரித்துக் கொண்டு போகிறதே.

ஹீரோக்கள் தன் மீது வைத்திருக்கும் மதிப்பை பார்த்து நயன்தாரா திக்குமுக்காடிப் போயுள்ளாராம்.