பொதுவாக வளரும் ஹீரோயின் கள் ஹீரோ தான் முக்கியம் என அடம் பிடிப்பார்கள் ஆனால் ஹன்சிகா நேர் எதிர் மாறு (தற்போது )

கதை எனக்கு பொருத்தமாக இருந்தால் எந்த ஹீரோவுடனும் நடிப்பேன்: ஹன்சிகா

தமிழ் பட உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஹன்சிகா. தற்போது ஜெயம் ரவியுடன் ‘போகன்’, உதயநிதியுடன் ‘மனிதன்’, புதுமுகம் சித்துவுடன் ‘உயிரே உயிரே’ படங்களில் நடித்து வருகிறார்.

ஹன்சிகா, அவருடன் நடிப்பது பெரிய ஹிரோவா, சிறிய ஹீரோவா, வளரும் ஹீரோவா என்று பார்ப்பது இல்லை. இதுகுறித்து கேட்ட போது…

நான் நடிக்கும் படத்தில் எந்த ஹீரோ என்னுடன் நடிக்கிறார் என்று பார்ப்பது இல்லை. கதை எப்படி இருக்கிறது என்றுதான் பார்ப்பேன்.

அந்த பாத்திரம் எனக்கு பொருத்தமாக நன்றாக இருந்தால் நிச்சயம் நடிப்பேன். நான் நடிக்கும் படங்கள் அனைத்தும் வெற்றி பெற வேண்டும் என்று தான் விரும்புறேன். தோல்வி அடையும் போது என்னுடைய மனம் பாதிக்கும் வருந்துவேன், நானும் பெண் தானே.

எனது படங்கள் வெற்றி பெறும் போது மகிழ்ச்சி அடைவேன். நான் நடிக்கும் படங்கள் அனைத்தும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் கதை கேட்டு எனக்கு பொருத்தமான பாத்திரங்களில் நடிக்கிறேன் என்றார்.