‘வாலு’ விஷயத்தில் யாரும் என்னை கை காட்ட முடியாது: ஹன்சிகா

வாலு விஷயத்தில் யாரும் தன்னை கை காட்ட முடியாது என்று நடிகை ஹன்சிகா தெரிவித்துள்ளார். வாலு படத்தில் சிம்புவும், அவரது முன்னாள் காதலியான ஹன்சிகாவும் நடித்து வருகின்றனர். இந்த படம் ஆண்டுக் கணக்கில் இழுத்துக் கொண்டிருக்கிறது. படத்தில் ஒரு பாடல் காட்சி மட்டும் தான் பாக்கி உள்ளது என்றும், மற்றவை எல்லாம் படமாக்கப்பட்டுவிட்டது என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து ஹன்சிகா கூறுகையில்,

வாலு படத்திற்காக 60 நாட்கள் கால்ஷீட் கேட்டார்கள். பின்னர் அந்த படத்திற்கு கூடுதலாக 80 நாட்கள் வேறு கால்ஷீட் கொடுத்தேன்.

வாலு புதிய இயக்குனரின் படம் மற்றும் பிரபலமான தயாரிப்பு நிறுவனத்தின் படம் என்பதால் எனது முழு ஒத்துழைப்பை அளித்து வருகிறேன்.

படத்தில் இறுதியாக ஒரு பாடல் மட்டும் பாக்கி உள்ளது. அதை படமாக்க கடந்த 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை கால்ஷீட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் அதை பயன்படுத்தவில்லை.

தற்போது என் கால்ஷீட் புத்தகம் நிரம்பி வழிகிறது. அதனால் வாலு படத்திற்கு கொடுக்க டேட்ஸ் இல்லை. என்னுடைய பிற படங்களின் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் மனது வைத்தால் தான் வாலு படத்திற்கு மறுபடியும் டேட்ஸ் கொடுக்க முடியும்.

என் பக்கம் நான் தெளிவாக உள்ளேன். பின்னால் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டாலும் யாரும் என்னை கை காட்ட முடியாது.

வாலு படத்திற்காக என் பக்கத்தில் இருந்து செய்ய வேண்டியதை நான் செய்துவிட்டேன். என்னை யாரும் குறை கூற முடியாது என்றார் ஹன்சிகா.

Loading...