தமிழ் சினிமாவில் தற்போதுள்ள ஹீரோக்களின் பேவரட் ஹீரோயின் கீர்த்தி சுரேஷ் தான். அதிலும் ரஜினி முருகன் வெற்றி இவரை இளைய தளபதிக்கு ஜோடியாக அடுத்த படத்தில் நடிக்க வைத்துள்ளது.

இந்நிலையில் ஆரம்பத்தில் இவர் நடித்த மலையாள படங்கள் ஏதும் ஹிட் ஆகவில்லை, இதுமட்டுமின்றி தமிழில் இவர் அறிமுகமான இது என்ன மாயம் படமும் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை.

ஆனால், தற்போது கீர்த்தி நடிக்கும் அனைத்து படங்களுக்கும் இவருடைய புகைப்படம் தான் விளம்பரங்களில் பெரிதும் பயன்ப்படுத்தப்படுகின்றது. பாபிசிம்ஹாவுடன் இவர் நடித்துள்ள பாம்புசட்டை படத்தின் போஸ்டரில் கீர்த்தி சுரேஷ் புகைப்படம் தான் நிறைய இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.