நயன்தாரா தற்போது மாயா பட பாணியில் அறிமுக இயக்குனர் தாஸ் ராமசாமி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் நயன்தாரா பயன்படுத்தும் கார் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறதாம். இந்த காருக்குள் பேய் புகுவதும் அதனால் ஏற்படம் விளைவுகளும் தான் இப்படத்தின் கதையாம்.

சற்குணம் தயாரிக்கும் இந்த புதிய படத்திற்கு டிக் டிக் டிக் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில் விவேக் சிவா மற்றும் மெர்வின் சாலமன் அகியோர் இப்படத்துக்கு இசையமைத்து வருகின்றனர்.