திருமணம் செய்துகொள்ளும் எண்ணத்தில் உள்ளதால் அனுஷ்கா புதிதாக எந்த படத்தில் நடிக்கவும் சம்மதிக்கவில்லை என்று தகவல் கசிந்துள்ளது. தற்போதுள்ள நடிகைகளிலேயே குணச்சித்திரம், கவர்ச்சி என எந்த வேடமாக இருந்தாலும் பக்காவாக பொருந்தி போவது அனுஷ்காவுக்குதான். அப்படி ஒரு நல்ல நடிகையை திரையுலகம் விரைவில் இழக்கப்போகிறது என்பது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றமாகத்தான் இருக்கும்.

அனுஷ்கா தற்போது ரஜினிகாந்த்தின் லிங்கா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் அனுஷ்கா நடிக்க வேண்டிய பகுதிகள் இந்த மாதத்திற்குள் முடிவடைந்து விடுமாம்.

லிங்காவை தவிர மகாபலி மற்றும் ருத்ரமாதேவி ஆகிய படங்களிலும் அனுஷ்கா நடித்து வருகிறார். இந்த திரைப்படங்களின் சூட்டிங் முடிந்ததும் வேறு படங்களில் கமிட் ஆவதை தவிர்த்துள்ளார் அனுஷ்கா.

உச்சத்தில் இருக்கும் அனுஷ்கா பட வாய்ப்புகளை தவிர்க்க அவருக்கு கல்யாண யோகம் வந்துள்ளதே காரணம் என்று கோலிவுட் பக்கம் கிசுகிசுக்கிறார்கள். திருமணத்துக்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை தவிர்க்க அனுஷ்கா முடிவு செய்துள்ளாராம்.

சமீபத்தில் ஒரு இளம் இயக்குநர் அனுஷ்காவை சந்தித்து கதை கூறியதாகவும், ஹீரோயின் சார்ந்த கதையம்சம் கொண்ட அந்த கதையை கேட்டதும் அனுஷ்காவுக்கு மிகவும் பிடித்துப்போனதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் அனுஷ்கா என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.

அனுஷ்கா திருணம் செய்ய உள்ளது, திரைத்துறையை சார்ந்த யாரையும் கிடையாது என்று உறுதியாக கூறுகின்றன பட்சிகள். ஆனால் நடிகைகளின் திருமண இலக்கணத்தை அனுஷ்கா மீறப்போவதில்லை. ஆம்.. அதேதான்.. தொழிலதிபரை மணக்கப்போகிறாராம்.