அரண்மனை படத்தின் ரிலீஸை நினைத்து ஹன்சிகா படபடப்பில் தூக்கம் இன்றி உள்ளாராம். சுந்தர் சி. இயக்கத்தில் ஹன்சிகா கிராமத்து பெண்ணாக வித்தியாசமாக நடித்துள்ள படம் அரண்மனை. படம் நாளை ரிலீஸாக உள்ளது. படத்தில் ஹன்சிகா தவிர்த்து லக்ஷ்மி ராய், ஆண்ட்ரியா ஆகியோரும் உள்ளனர். படம் நாளை ரிலீஸாவதால் மகிழ்ச்சி கலந்த படபடப்பில் ஹன்சிகா தூக்கம் இன்றி உள்ளாராம். இது குறித்து ஹன்சிகா கூறுகையில்,

அரண்மனை படம் அருமையாக வந்துள்ளது. அதில் நான் கிராமத்து பெண் செல்வியாக நடித்துள்ளேன். தேங்க்யூ என்று கூட ஆங்கிலத்தில் சொல்லத் தெரியாத பெண்ணாக நடித்துள்ளேன்.

செல்வி காதலில் விழுகிறாள் அதன் பிறகு நடப்பவை தான் கதை. ஒரு கதாபாத்திரமாக நான் எளிதில் மாறிவிடுவேன். ஆனால் இந்த படத்தில் கதாபாத்திரமாக மாற எனக்கு தினமும் 15 நிமிடங்கள் தேவைப்பட்டது.

Hansika Motwani - Aranmanai_1

இந்த கதாபாத்திரம் சற்று கடினமாக இருந்தது. ஆனால் சுந்தர் சார் தான் எளிதாக்கினார். அவர் மிகவும் ஆதரவாக இருந்தார்.

இந்த படத்தில் வித்தியாசமான ஹன்சிகாவை ரசிகர்கள் பார்ப்பார்கள். 10 ஆண்டுகள் கழித்தும் இந்த படம் எனக்கு ஸ்பெஷலானதாக இருக்கும்.

படம் ரிலீஸாகும் வெள்ளிக்கிழமை அன்று நான் தியேட்டர்களுக்கு சென்று படம் பார்க்க உள்ளேன் என்றார் ஹன்சிகா.