ப்ரேமம் மலர் என்றால் யாருக்கும் தெரியாமல் இருக்காது. அந்த அளவிற்கு மலர் கதாபாத்திரத்தின் மூலம் நம்மை கவர்ந்தவர் சாய் பல்லவி.

இவர் அடுத்து மணிரத்னம் இயக்கும் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால், இவர் இந்த படத்திலிருந்து விலகியதாக ஒரு வதந்தி வெளிவந்தது.

இதுக்குறித்து அவர் அளித்த விளக்கத்தில் ‘மணிரத்னம் சார் படத்தில் யாராவது நடிக்க மாட்டேன் என கூறுவார்களா? அவருக்கு இன்னும் கொஞ்சம் வயது அதிகமான நடிகை தேவைப்பட்டார், அதனால், தான் என்னால் நடிக்க முடியவில்லை, இதற்கு மேல் நான் என்ன செய்வது, மற்றப்படி நானாக தான் அந்த படத்திலிருந்து வெளியேறவில்லை’ என வருத்தத்துடன் கூறியுள்ளார்.