பாட்டு பாடும் வாய்ப்புகள் வந்தால் அவற்றை நிச்சயம் ஒப்புக் கொள்வேன் என்று நடிகை லக்ஷ்மி மேனன் தெரிவித்துள்ளார். லக்ஷ்மி மேனன் பேரழகி எல்லாம் இல்லை. ஆனால் பார்க்க பக்கத்து வீட்டு பெண் போன்று உள்ளார். மேலும் அவர் நடித்து வரும் படங்கள் எல்லாம் தொடர்ந்து வெற்றி பெறுகின்றன. இதனால் லக்ஷ்மியுடன் ஜோடி சேர ஹீரோக்கள் ஆசைப்படுகிறார்கள்.

இத்தனை நாட்களாக நடிக்க மட்டும் செய்த லக்ஷ்மி மேனனை இமான் பாடகியாக்கியுள்ளார். ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் ‘குக்குறு குக்குறு…’ என்ற பாடலை பாடியுள்ளார் லக்ஷ்மி மேனன்.

இமான் சார் என்னை பாட அழைத்ததும் எனக்கு ஆச்சிரயமாகிவிட்டது. ஒத்திகையாக நான் பாடத் துவங்கியதும் அவருக்கு என் குரல் பிடித்துப் போய் முழு பாடலையும் பாடி முடிக்குமாறு கூறினார் என்றார் லக்ஷ்மி.

என் பாட்டி ஒரு மியூசிக் டீச்சர். என் ரத்தத்திலேயே இசை உள்ளது. அதனால் மேலும் பல பாடல்களை பாட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

தமிழோ, மலையாளமோ எந்த மொழியாக இருந்தாலும் சரி பாட வாய்ப்பு வந்தால் நிச்சயம் அதை ஏற்பேன் என்று லக்ஷ்மி மேனன் தெரிவித்தார்.