தெறி வெற்றியால் கொஞ்சம் சந்தோஷத்தில் உள்ளார் சமந்தா. ஏனெனில் தமிழில் இவர் நடித்து வெற்றி பெற்ற படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘சினிமா நடிகைகள் என்றாலே மக்களுக்கு ஒரு தவறான கணிப்பு இருக்கின்றது, ஹீரோயின்களுக்கு அதிக பணம் கிடைக்கும் என்ற எண்ணம் உள்ளது.

ஆம், அதிக பணம் கிடைக்கும் தான், ஆனால், கட்டு கட்டாக பணத்தை பீரோவில் சேர்த்து வைக்கும் ஆள் நான் இல்லை.

என் தேவைகளுக்கு அதிகமான பணம் என்னிடம் உள்ளது, இனி நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் மட்டுமே நடிப்பேன்’ என கூறியுள்ளார்.