கற்றது தமிழ், அங்காடி தெரு படத்தின் மூலம் சிறந்த நடிகை என்று பெயர் பெற்றவர் அஞ்சலி. ஆனால் அவர் வாழ்வில் ஏற்பட்ட சில கசப்பான சம்பவத்தால், சில நாட்கள் சினிமாவில் தலை காட்டாமல் இருந்தார்.தற்போது மீண்டும் ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அஞ்சலிக்கு நிறைய மர்ம போன் கால்கள் வருகிறதாம். எதிர்முனையில் பேசுபவர் தவறான வார்த்தைகளை கூற, சில நேரங்களில் அவர்கள் பேசுவதே இல்லையாம், இப்படி தொடர்ந்து இவருக்கு டார்ச்சர் கொடுத்து வருகின்றனர்.அந்த போன் நம்பர் யாருடையது என்று அஞ்சலி தரப்பில் சர்ச் பண்ணினால் அது பப்ளிக் போனாக இருக்கிறதாம். இதனால் தன் நம்பரை இனி யார் கேட்டாலும் கொடுக்க கூடாது என்று, நண்பர்களிடம் கேட்டுக்கொண்டார் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

Anjali-New-Photos-16