ஒரே நேரத்தில் ஃபீல்டில் முன்னணியில் இருக்கும் இரு நடிகைகள் சேர்ந்து பணியாற்றுவதே வெகு அரிது.. அதிலும் ஒரு நடிகையை வைத்து இன்னொரு நடிகை படம் தயாரிக்க முன் வருகிறார் என்றால் சாதாரண விஷயமா… அப்படி ஒரு விஷயம் தெலுங்கில் நடந்தது. இந்தியில் வென்ற குயீன் படத்தை ரீமேக் செய்ய விரும்பினார் சமந்தா.

தயாரிப்பாளராக மட்டும் இருந்து கொண்டு, வேறு நடிகையை ஹீரோயினாக்கத் திட்டம். ஆனால் அந்தப் படத்தை தென்னிந்தியாவில் ரீமேக்கும் உரிமைகளை வாங்கிவிட்டார் பிரசாந்த் அப்பா தியாகராஜன்.

எனவே வேறு ஒரு படம் தயாரிக்கத் திட்டமிட்ட சமந்தா, தமன்னாவை அதில் ஹீரோயினாக்க விரும்பினார். இதுகுறித்து தமன்னாவிடமும் பேசினாராம். அப்போதைக்கு ஒப்புக் கொண்ட தமன்னா, பின்னர் தனியாக தீவிரமாக யோசித்திருப்பார் போலிருக்கிறது.

சமந்தாவே முன்னணி நடிகைதானே.. நம்மைவிட ஏகத்துக்கும் கவர்ச்சியும் காட்டுகிறார். அப்புறம் எதுக்கு நம்மை அழைக்கிறார், என சந்தேகப்பட்ட தமன்னா, பட வாய்ப்பை ஏற்க தயங்குகிறாராம்!