பொன்னியின் செல்வனில் நடிப்பதை உறுதி செய்த ஐஸ்வர்யா ராய்!

பொன்னியின் செல்வன் படத்தில் தான் நடிப்பதை உறுதி செய்துள்ள நடிகை ஐஸ்வர்யா ராய், நடிகர் அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பொன்னியின் செல்வனில் நடிப்பதை உறுதி செய்த ஐஸ்வர்யா ராய்!
ஐஸ்வர்யா ராய்

பொன்னியின் செல்வன் படத்தில் தான் நடிப்பதை உறுதி செய்துள்ள நடிகை ஐஸ்வர்யா ராய், நடிகர் அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் மணிரத்னம் இயக்கிய இருவர் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு குரு, ராவணா என மேலும் இரண்டு படங்களில் மணிரத்னத்துடன் பணியாற்றி இருக்கிறார். 

மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் படத்தை இயக்கும் முணைப்பில் உள்ளார். இப்படத்தை சுபாஷ்கரனின் லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதில் நந்தினி கதாபாத்திரத்தில் ஜஸ்வர்யா ராஸ் நடிப்பதாக பேசப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் சென்னையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போது செய்தியாளர்களிடம் பேசிய ஐஸ்வர்யா ராய், தான் பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதை உறுதி செய்தார். ஆனால் அந்த படம் குறித்த வேறு எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ள அவர் மறுத்துவிட்டார். 

இதுகுறித்து ஐஸ்வர்யா ராய் கூறியதாவது, "பொன்னியின் செல்வன் படத்தில் நான் நடிப்பது உண்மை தான். அவரோடு இந்த படத்தில் பயணிப்பது மகிழ்ச்சி. இந்த படத்தில் அவர் எனக்கு எந்த கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அது எனக்கு பெருமை தான். மற்றப்படி இந்த படம் குறித்து மணிரத்னம் சார் தான் பேச வேண்டும். அவருடைய அனுமதி இல்லாமல் இந்த படம் குறித்து நான் பேசுவது நியாயமாக இருக்காது. அவர் என்னுடைய குருநாதர். எனவே அவர் மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு", என்றார். 

மேலும் அஜித் குறித்து கேட்டதற்கு, "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் பட ஷூட்டிங்கின் போது அஜித்தை தான் ஓரிருமுறை பார்த்திருக்கிறேன். அவர் ஒரு வியக்கத்தகு புரொபஷனல். அஜித்தின் இந்த வெற்றியையும், அவர் மீது அவரது ரசிகர்கள் வைத்திருக்கும் பாசத்தை பார்த்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவருக்கு அது உரியதாகும். 

அவருடன் நான் அதிகம் நடிக்கவில்லை என்றாலும், படப்பிடிப்பின் போது பார்த்திருக்கிறேன். கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் பட ஷூட்டிங்கின் போது அவருடைய குடும்பத்தை பார்த்ததும் எனக்கு நினைவில் இருக்கிறது. மீண்டும் அவரை ஒருமுறை பார்த்தால், நிச்சயம் அஜித்துக்கு கைக்குலுக்கி வாழ்த்து கூறுவேன்", எனக் கூறினார். 

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் மம்முட்டி மற்றும் அப்பாஸ்க்கு தான் ஜோடியாக நடித்தார். அஜித்துக்கு ஜோடியாக தபு தான் நடித்திருந்தார். நடிகை ஐஸ்வர்யா ராய் தமிழில், மணிரத்னம், ஷங்கர், ராஜிவ் மேனன் என பெரிய இயக்குனர்களின் படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.