இருட்டு அறையில் முரட்டு குத்து 2 வாய்ப்பை உதறி தள்ளிய பிக்பாஸ் நடிகை!

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை வீட்டிற்கு தெரியாமல் தியேட்டருக்கு சென்று பார்த்து மக்கள் விமர்சனத்திற்கு முகம் காட்டாமல் கூச்சத்துடன் பயந்து ஓடியவர்கள் பலர்.

இருட்டு அறையில் முரட்டு குத்து 2 வாய்ப்பை உதறி தள்ளிய பிக்பாஸ் நடிகை!
இருட்டு அறையில் முரட்டு குத்து

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை வீட்டிற்கு தெரியாமல் தியேட்டருக்கு சென்று பார்த்து மக்கள் விமர்சனத்திற்கு முகம் காட்டாமல் கூச்சத்துடன் பயந்து ஓடியவர்கள் பலர்.

சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் வந்த இப்படத்தின் அடுத்த பாகத்தை அவரே இயக்கி ஹீரோவாக நடிக்கிறார் என்ற செய்தி அண்மையில் வெளியாகி ரசிகர்களின் முகத்தில் கள்ளச்சிரிப்பை வரவைத்தது.

முதல் பாகத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை யாஷிகா. பின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். தற்போது இருட்டு அறையில் முரட்டு குத்து 2 படத்தை வேண்டாம் என தேடி வந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டாராம்.

இவர் மட்டுமல்ல, மும்பையிலிருந்து வந்த இளம் நடிகை ரோஹினி என்பவரும் சங்கடப்பட்டுக்கொண்டு வேண்டாம் என கூறிவிட்டாராம்.