இங்கிலீஷ் விங்லீஸ் படத்தைப் போல ஸ்ரீதேவி நடித்துள்ள படம் மாம். இந்த படம் இந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது.

இந்த படம் அம்மாவுக்கும், மகளுக்கும் இடையிலான உறவை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. இதில் அக்சய் கண்ணா, நவாகதீன், சித்தகி, அபிமன்யூ சிங், சாஜல் அலி ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ரவி உதயவார் இயக்கியுள்ளார். ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் படத்தை தயாரித்துள்ளார்.

ஸ்ரீதேவியின் மகளாக சாஜல் அலி நடித்துள்ளார். ஆனால் ஒரிஜினல் மகளான ஜானவியை நடிக்க வைக்க சிலர் விரும்பினாலும் ஸ்ரீதேவி அதற்கு ஒத்துக் கொள்ளவில்லையாம்.

ஜானவி நடிக்காவிட்டாலும் ஸ்ரீதேவிக்கு ஜோடியாக அதாவது கணவராக நடிக்க அத்தன் சித்தகியை தேர்வு செய்தாராம்.

பாகிஸ்தானை சேர்ந்த அத்தனன் சித்தகி ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். எ மைடி ஹார்ட் என்ற படத்தில் ஏஞ்சலினா ஜோலியுடன் நடித்துள்ளார். இவரின் பெரிய ரசிகை ஜானவி. இதையடுத்து ஸ்ரீதேவியுடன் நடிக்க அத்தன் சித்தகியை ஒப்பந்தம் செய்துக் கொடுத்தாராம் அவரது மகள் ஜானவி.