அண்மையில், டெல்லியில் உள்ள கரோல் பாக் பகுதியில் உள்ள ஷாப் ஒன்றில் இந்தி நடிகை பூஜா மிஸ்ரா ஷாப்பிங் செய்ய சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த இளைஞர் ஒருவர், தன்னை ஈவ் டீசிங் செய்தார் என்று கூறி, பூஜா மிஸ்ரா அந்த இளைஞரை கடுமையாகத் திட்டி உதைத்து, தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் இது குறித்து போலீஸாரிடம் அவர் புகார் தெரிவித்துள்ளார். இந்தக் காட்சிகள் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸார் தரப்பில், “கடையில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவின் காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இது குறித்து வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை. இது பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக நடந்த படப்பிடிப்பா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.

வீடியோவை பார்க்க: