பிரபாஸ் தற்போது சாஹோ படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை ஷரதா கபூர் கமிட் ஆகியுள்ளார்.

இப்படத்தின் பட்ஜெட் எப்படியும் ரூ. 150 கோடிகளுக்கு மேல் இருக்கும் என கூறப்படுகின்றது, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் இப்படம் வரவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க ஷரதா கபூருக்கு ரூ. 8 கோடி வரை சம்பளம் கொடுத்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது.

இதை அறிந்த பல தென்னிந்திய நடிகைகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்களாம்.

Loading...