முன்னணி நடிகருக்கு ஜோடியாக பிரமாண்ட படத்தில் கமிட் ஆன வாணி கபூர்

வாணி கபூர்
வாணி கபூர்

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை வாணி கபூர். இவர் தமிழில் நானிக்கு ஜோடியாக ஆஹா கல்யாணம் என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் பாலிவுட்டில் அதிக பட்ஜெட்டில் ஆங்கிலப்படங்களுக்கு இணையாக ஹிரித்திக் ரோஷன், டைகர் ஷெரப் நடிக்கும் படம் ஒன்று தயாராகி வருகின்றது.

இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க வாணி கபூர் கமிட் ஆகியுள்ளாராம், மேலும், இப்படம் எப்படியும் 2019-ம் ஆண்டு தான் திரைக்கு வரும் என தெரிகின்றது.

ஏனெனில் படத்தின் பட்ஜெட்டும் அதிகம், அதை விட மிகவும் ஆபத்தான மற்றும் ரிஸ்க்கான சண்டைக்காட்சிகள் படத்தில் நிறையவுள்ளதாம்.

Loading...