பாலிவுட் சினிமாவில் அனைவரும் பிரம்மிக்கும் அளவிற்கு தயாராகிவரும் ஒரு படம் பத்மாவதி. அண்மையில் வெளியான இப்பட டிரைலர் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

படத்தில் தீபிகா படுகோனே அணிந்திருக்கும் நகைகளை 200 கைவினைக் கலைஞர்கள் சேர்ந்து உருவாக்கியுள்ளனராம். 400 கிலோ எடை கொண்ட தங்கத்தால் 600 நாட்களாக அந்த நகைகள் உருவாக்கப்பட்டதாம்.

ராஜபுத்திர காலத்தின் ஆபரணங்களைப் பற்றி நிறைய ஆய்வுகளைச் செய்து ஒவ்வொரு ஆபரணங்களும் வடிவமைக்கப்பட்டிருக்கிறதாம்.

சஞ்சய் லீலா பஞ்சாலி இயக்கியிருக்கும் இப்படத்தில் ரன்வீர் சிங், ஷாகித் கபூர் போன்றோரும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றனர்.