முன்னாள் பிரபஞ்ச அழகி நடிகை சுஷ்மிதா சென் விரைவில் 42 வயதை தொடவுள்ளார். இருப்பினும் அவர் இளமை தோற்றம் மாறாமல் இருக்க கடும் உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

சமீபத்தில் ஒர்க் அவுட் முடித்தபிறகு எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை சுஷ்மிதா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். “ஒர்க் அவுட் மீண்டும் துவங்கியுள்ளேன். நிதானமாக இருந்தாலும் நிச்சயம் என் பிறந்தநாளுக்குள் (6 பேக்) கிடைக்கும்” என தன இடுப்பு பகுதியை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார் அவர்.

சிறிது நேரத்தில் இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இன்ஸ்டாகிராமில் சுஷ்மிதா சென்னுக்கு பல ப்ரோபோசல்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.