பாலிவுட் நடிகை பாத்திமா சனா ஷேக் மீண்டும் சேலையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

கமல் ஹாஸனின் சாச்சி 420 படத்தில் அவர் மகளாக நடித்தவர் பாத்திமா சனா ஷேக். ஆமீர் கானின் மகள் கீதா குமாரி போகாட்டாக தங்கல் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார் சனா.

அவர் தற்போது ஆமீர் கானுடன் சேர்ந்து தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் படத்தில் நடித்து வருகிறார்.

பாத்திமா சனா ஷேக் சேலை அணிந்திருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் அவரின் அழகை புகழ்ந்துள்ளனர்.

பாத்திமா சனா ஷேக்
பாத்திமா சனா ஷேக்

முன்பும் கூட பாத்திமா சனா ஷேக் சேலை அணிந்து செல்ஃபி எடுத்து அதற்கு வெட்கங்கெட்ட செல்ஃபி என்று தலைப்பிட்டு இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அதை பார்த்த நெட்டிசன்ஸ் இப்படியா சேலை கட்டுவது என்று அவரை திட்டித் தீர்த்தனர்.

நெட்டிசன்ஸ் சனாவை திட்டுவது புதிது அல்ல. முன்னதாக அவர் வெளிநாட்டுக்கு ஷூட்டிங்கிற்கு சென்ற இடத்தில் பிகினியில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டார். அதை பார்த்தவர்கள் ஒரு முஸ்லீம் பெண் இப்படியா செய்வது என்று திட்டினர்.

பாலிவுட்டில் ஆமீர் கானின் வழிகாட்டுதலுடன் பயணித்துக் கொண்டிருக்கிறார் சனா. காதல் முதல் எந்த விஷயமாக இருந்தாலும் ஆமீரிடம் அறிவுரை கேட்பதாக சனா தெரிவித்துள்ளார்.

Loading...