ஐஸ்வர்யா ராய் திருமணத்திற்கு பிறகு நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது நடிக்கத்தொடங்கியுள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் ஜாஸ்மின் என்ற ஒரு படத்தின் பர்ஸ்ட் லுக் வந்தது.

இதில் ஐஸ்வர்யா ராய் வாடகை தாயாக நடிக்கின்றார் என கூறப்பட்டது, இவை ரசிகர்கள் அனைவரும் இதை எதிர்த்தனர்.

இதை தொடர்ந்து நம் தளத்தில் கூட இதை கூற, தற்போது ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

அது என்னவென்றால் ஜாஸ்மின் படத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராயை யாருமே அணுகவில்லையாம், படத்தில் பப்ளிசிட்டிக்காக ஜாஸ்மின் இயக்குனர் இப்படி செய்துள்ளார் என்று ஐஸ்வர்யா ராய் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இதன் மூலம் ஐஸ்வர்யா ராய் மிகவும் கோபத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.