அலியா பட் என்ன பேசினாலும் அது கேலிக்கூத்தாகி விடுகிறது அல்லது பிறரின் நக்கலுக்குள்ளாகி விடுகிறது. அவரை வைத்து ஏகப்பட்ட கிண்டல்கள், கேலிகள், மீம்கள் உலா வருகின்றன. ஆனால் அதை அவர் கண்டு கொள்வதே இல்லை. ஜஸ்ட் லைக் தட் எடுத்துக் கொண்டு போய் விடுகிறார்.

இந்த நிலையில் அவர் மீண்டும் கேலிக்குள்ளாகியுள்ளார். ஒரு பாடல் வெளியீட்டில் அலியா பட் கலந்து கொண்டார். அவர் நடித்துள்ள ஷாந்தார் படத்தின் பாடல் வெளியீட்டு விழா அது.

இந்த நிகழ்ச்சியின்போது மீடியாக்காரர்களை அழைத்து உங்களுக்குப் பிடித்த பாட்டு எது என்பதை ஓட்டாகப் போடுங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள். ஒரு பெட்டியும் வைக்கப்பட்டது. பத்திரிகையாளர்களும் ஓட்டுப் போட்டனர்.

அப்போது ஒருவர் தனது கையில் இருந்த வாக்குச் சீட்டை ஆட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்த அலியா, உடனே மைக்கை எடுத்து, ஹலோ, அவர் அதைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறார் பாருங்கள். யாராவது போய் வாங்குங்கள் என்று கூறவே கூட்டத்தில் சிரிப்பு வெடித்தது.

அவர் சொன்னதை அங்கிருந்தவர்கள் டபுள் மீனிங்கில் எடுத்துக் கொண்டு சிரித்தனர். படத்தின் நாயகன் ஷாஹித் கபூரும் வாய் விட்டு பலமாக சிரித்து விட்டார். பின்னர் அலியாவிடமே அவர் பேசியதன் அர்த்தத்தை (அதாவது இவர்களாகப் புரிந்து கொண்ட அர்த்தத்தை) கூறி அவரைக் கிண்டலடிக்க வேறு செய்தார் ஷாஹீத் கபூர்.

ஆனால் அலியா பட் வழக்கம் போல இதையும் சிரித்துக் கொண்டே விட்டு விட்டார். நான் ஜோக்குக்கெல்லாம் மனம் உடைந்து போவதே இல்லை என்றும் அவர் கூலாக கூறினார்.