நடிகை எமி ஜாக்சன் சூப்பர் ஸ்டார் ரஜினியோடு இணைந்து ஷங்கர் இயக்கத்தில் நடித்துள்ள ‘2.ஓ’ படம் இந்த வருடம் திரைக்கு வரவுள்ளது.

எமி ஜாக்சன் தற்போது ‘சூப்பர்கேர்ள்’ சீரிஸில் சேட்டர்ன் கேர்ளாக நடித்து வருவதால் அமெரிக்காவில் இருக்கிறார். இதனால் இனி இந்தியப் படங்களில் நடிக்க மாட்டார் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில் எமி ஜாக்சன் அடுத்து சல்மான் கானின் ‘கிக் 2’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

எமி ஜாக்சன்
எமி ஜாக்சன்

தமிழில் ‘மதராசப்பட்டினம்’ படத்தில் அறிமுகமான லண்டன் நடிகை எமி ஜாக்சனை, அதற்கடுத்து இந்தியில் தான் இயக்கிய ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் ரீமேக்கான ‘ஏக் திவானா தா’ படத்தில் நடிக்க வைத்தார் கெளதம்மேனன்.

எமி ஜாக்சன், சல்மான்கான்
எமி ஜாக்சன், சல்மான்கான்

அதையடுத்து தமிழ், தெலுங்கு படங்களில் நடித்தபடியே இந்தியிலும் தொடர்ந்து நடித்து வருகிறார் எமி ஜாக்சன். பிரபலமான ஹாலிவுட் டிவி சீரியலிலும் நடித்து வந்த எமி ஜாக்சன், இனிமேல் இந்தியப் படங்களில் நடிக்க மாட்டார் என்று கூறப்பட்டது.

ஆனால், இப்போது அவர் மீண்டும் இந்தியப் படங்களில் கமிட்டாகி வருகிறார். கன்னடத்தில் தயாராகி வரும் ‘தி வில்லன்’ படத்தில் சிவராஜ்குமாருடன் இணைந்து நடித்து வரும் எமி, இந்த படத்தை அடுத்து இந்தியில் சல்மான்கான் நடிக்கும் ‘கிக் 2’ படத்தில் நடிக்கிறார்.

‘கிக் 2’ படம் இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்கு பிறகு தொடங்குகிறது. முன்னதாக இப்படத்தில் கிக் முதல் பாகத்தில் நடித்த ஜாக்குலின் பெர்ணான்டஸ் நடிக்க இருந்தார். தற்போது எமி ஜாக்சன் நடிக்கவிருப்பதால் அவர் விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது.